Sep 03

ஆபத்தில் சிக்கிய மனைவியின் அவலக்குரல்; அதிர்ச்சியில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

மனைவியைக் கொல்ல முனைந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை, கணவர் கோடரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.


தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்திலுள்ள தெனியாய பகுதியிலேயே இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை குறித்த நபர் அப்பகுதியிலுள்ள வீட்டில் இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முற்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த பெண் அலறியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மனைவியின் அலறல் சத்தத்தைக் கேட்ட கணவன் வீட்டின் பின்னால் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்ததுடன் மனைவியைக் கொல்ல முயன்ற நபரை கோடரி ஒன்றால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் அந்த இடத்திலேயே விழுந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்ததுடன் அவரை இன்றையதினம் மொரவக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.