Sep 03

மின்சாரத்தில் இயங்கும் படகு


மின்னினால் இயங்கும் கார் பஸ் தொடரூந்து என அத்தனை வாகனங்களும் வந்து விட்டன இப்போது இன்னும் ஒரு வருகை காத்திருக்கிறது அது மின்சாரப் படகு.கடல், ஆறு மற்றும் குளங்களில் படகு பயன்படுத்துப்படுகிறது. துடுப்பு, டீசல் மோட்டார் போன்ற பல வகைகளில் படகுகள் உள்ளன.

இந்நிலையில் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் படகினை பின்லாந்தின் 'கியூ - யாச்ட்' நிறுவனம் வடிவமைத்துள்ளது. இது பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இப்படகிற்கு,'கடல்களின் டெஸ்லா' என பெயரிடப் பட்டுள்ளது. மிக எடைகுறைந்த பைபர் கிளாசினால் படகு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படகினை ஏரிகளில் சுற்றுலா மற்றும் மீன் பிடிக்க பயன்படுத்தலாம். இந்த படகு எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்குவதால், மிக குறைந்தளவு மட்டுமே கார்பனை வெளியிடுகிறது. இதன் மூலம் சுற்றுப்புற சூழலுக்கும் உகந்த வகையில் உள்ளது. மேலும் ஒலியின் அளவும் குறைவாக இருக்கும். 30 அடி நீளம் உடையது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 148 கிலோ மீட்டர் துாரம் செல்லும் திறன் பெற்றது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 28 கி.மீ. இதில் எட்டு பேர் அமரலாம். அல்லது நான்கு பேர் மற்றும் நான்கு பேருக்கான டேபிளுடன் இது அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர பொருட்கள் வைப்பதற்கான இடமும் உள்ளது. மரத்தில் ஆன ஸ்டியரிங் வீல் உள்ளது. இதற்கு அருகில் 'ஐபேட்' மூலம் இருப்பிடத்தை அறிந்து கொண்டு படகை இயக்கலாம். எல்.இ.டி., விளக்குகள், பாடல் கேட்கும் வசதியும் உள்ளது. இப்படகின் விலை மற்றும் சந்தைக்கு வரும் திகதி என்பவற்றை தயாரிப்பு நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.