Jun 09

சம்பியன் தொடர்; இந்தியாவை இலகுவாக வென்றது இலங்கை

சம்பியன் கிண்ணத்தொடரில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி ஓவலில் நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சி வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பைச் செய்தது.

அதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது. இந்திய அணி சார்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா(78) தவான் (125) டோனி (63) ஓட்டங்களைப் பெற்று அணியை வலுப்படுத்தினர்.

பதிலுக்கு இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கைக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவரான டிக்வெல்ல(07) ஏமாற்றமளிக்க அடுத்து வந்த குஷால் மெண்டிஸ், தனுஷ்க குணத்திலக்கவுடன் இணைந்து சிறந்த அடித்தளத்தை இட்டார் இரண்டாவது விக்கெட்டுக்காக 159ஓட்டங்களை இருவரும் பகிர்ந்த நிலையில் தனுஷ்க குணத்திலக்க(76) ஓட்டங்களுடன் ரன் அவுட்டானார்.

அதனைத்தொடர்ந்து குஷால் மெண்ஸும் (89) ஓட்டங்களுடன் ரன் அவுட்டாக அவருக்கு அடுத்து வந்த குஷால் பெரேராவும், அணித்தலைவர் மத்தியூஸும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். நான்காவது விக்கெட்டுக்காக 75ஓட்டங்கள் பகிர்ந்திருந்த நிலையில் குஷால் பெரேரா(47) ஓய்வறைக்கு திரும்பினார். 

அதனைத்தொடர்ந்து அசேல குணரத்னவுடன் இணைந்து அதிரடியைத் தொடர்ந்த அணித்தலைலர் மெத்தியூஸ் ஆட்டமிழக்காது 52ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 48.4ஓவர்களில் 3விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக குஷால் மெண்டிஸ் தெரிவானர்.