Sep 03

வித்தியாசமான முறையில் வெளியேறிய டேனியல்: கல்யாணத்துக்கு ரெடியாம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து டேனியல் வெளியேற்றப்பட்டுள்ளார். 

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் வெற்றி பெற்றால் என்ன பேசுவீர்கள் என்ற கேள்வியோடு விவாதம் தொடங்கியது. இதில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுனாங்க. இறுதியில், ஜனனி, பாலாஜி மற்றும் டேனியல் ஆகியோருக்கு இடையில் இருந்த நாமினேசனில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்பது தான். 

இந்த வாரம், வித்தியாசமான முறையில், வெளியேற்றும் படலம் நடந்தது. அதில், பச்சை நிற பந்து யார் கிட்ட வருகிறதோ? அவர்கள் காப்பாற்றப்பட்டதாக அர்த்தம். அந்த வரிசையில், இந்த மூவருக்கும் இடையில், நடந்த போட்டியில், பாலாஜி காப்பாற்றப்பட்டார்.

இவரைத்தொடர்ந்து ஜனனி மற்றும் டேனியல் இருவரும் ஒரு பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். இதில், யார் திறந்து விடப்படுகிறார்களோ அவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதாக அர்த்தம். அந்த வகையில், டேனியல் திறந்துவிடப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

வெளியேறிய பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டம் கொடுத்து பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளார். அதோடு, பிக் பாஸ் போட்டியாளர்களையும், கமல் ஹாசனையும் பிரமிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.