Sep 01

பச்சோந்திகள் ஏன் நிறம்மாறுகின்றன?

பச்சோந்திகள் நிறம் மாறுமென பாடப்புத்தகங்களில் படித்திருப்பதோடு, சிலர் அவற்றை நேரிலும் அவதானித்திருக்க வாய்ப்புள்ளது.

எனினும் குறித்த பச்சோந்திகள் எவ்வாறு நிறம்மாறுகின்றன, ஏன் நிறம்மாறுகின்றன என்ற சிந்தனை சிறுவர்களாக இருக்கும் போது தோன்றியிருக்கும். அதன் மீதான தேடல்களும் அதிகரித்திருக்கும்.

இந்நிலையில், சிலர் புத்தகங்களினூடாக அதற்கான விடையை அறிந்திருக்க வாய்ப்புள்ளது. சிலர் பச்சோந்தி நிறம் மாறும் எனத் தெரிந்தும், காரணம் தெரிந்து கொள்ள ஆசை இருந்தும், அதற்கான வாய்ப்பை அனுகியிருக்க முடியாது.

எனவே பச்சோந்திகள் எவ்வாறு நிறம்மாறுகின்றன என்பது தொடர்பில் அறிந்து கொள்ளலாம்.

குறித்த உயிரினத்தின் தோல்களில் இருக்கும் சிறப்பு செல்களால் அவற்றின் நிற மாற்றம் இடம்பெறுகிறது.

இவற்றின் செல்களுக்குள் நானோ கிறிஸ்டல் என்னும் மற்றுமொரு செல்கள் உள்ளன. அவை சிறிய முட்கள் போன்று வேறுபட்ட அளவுகளிலும் வடிவங்களிலும் அமையப்பெற்றிருக்கும்.

வெளிச்சத்திற்கு ஏற்றால் போன்று வேறுபட்ட அலை நீளங்களை பிரதிபலிக்க, பச்சோந்திகள் இந்த கிறிஸ்டல் செல்களை மாற்றியமைக்கும் திறன் கொண்டுள்ளது.

தனது உருவத்தை மறைப்பதற்கு மட்டுமின்றி, இந்த உயிரினத்தால் எளிதாக நிறம்மாறக் கூடிய இயல்பு உள்ளமையே அதன் தனித்துவம்.

அத்தோடு தமது இனத்திற்கிடையில் (பிற பச்சோந்திகள்), தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு, பச்சோந்திகள் பயன்படுத்தும் சமிக்ஞை, இந்த நிறமாற்றம் என்பதே விசேட அம்சமாகும்.