Sep 01

நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்த்தீனிய அகதிகள் முகவரகத்திற்கான தமது நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்க அறிவித்துள்ளது.பாலத்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மீட்புப் பணி முகவரகம், தவறிழைத்துவிட்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த விடயத்தை அமெரிக்க நிர்வாகம் மீளாய்வு செய்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மீட்புப் பணி முகவரகத்திற்கு நிதியுதவியளிக்க முடியாது என இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஹீதர் நவட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை பாலஸ்த்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் மீட்புப் பணி முகமையின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் கடுமையாக எதிர்த்துள்ளார்.இதேநேரம், அமெரிக்காவின் நடவடிக்கை பாலஸ்த்தீன மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும் என பாலஸ்த்தீனிய தலைவர் மகமூத் அபாஸின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.