Sep 01

கடைசி ஆசையை நிறைவேற்ற முடியவில்லை எனக் கதறும் காதலி!

அவுஸ்திரேலியாவில் குருதிப் புற்று நோய் காரணமாக மைக்கல் ஓவன்ஸ் வயது 23 என்பவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிர் பிரியும் இந்நிலையில் அவரது தோழி ரோசியிடம் தன்னை திருமணம் செய்து கொள்வாயா? எனக் கேட்டுள்ளார்.


அவர் இவ்வாறு கேட்ட சம்பவம் எல்லோர் மனங்களையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் ரோசியை தான் காதலிப்பதாகவும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதும் எவ்வித தயக்கமுமின்றி ரோசி சம்மதம் தெரிவித்துள்ளார்.

இக் காதல் திருமணம் பற்றி பேசி ஒரு சில மணி நேரங்களில் மைக்கல் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் ரோசியின் மனதைப் பெரிதும் பாதித்துள்ளது.