Sep 01

கிளர்ச்சியாளர்களை விரட்டியடிக்க சிரிய அரசாங்கத்திற்கு உரிமை உண்டு: ரஷ்யா

கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள இட்லிப்பிலிருந்து அவர்களை விரட்டியடிப்பதற்கு சிரிய அரசாங்கத்திற்கு அனைத்து உரிமையும் உள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

எரித்திரிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் ரஷ்யா சோச்சி நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தமது பிராந்தியத்திலிருந்து விரட்டியடிப்பதற்கான முழு உரிமையும் சிரிய அரசாங்கத்திற்கு உண்டு.

இதேவேளை, மத்திய கிழக்கிலும், வட ஆபிரிக்காவிலும் உள்ள நெருக்கடிகளை தீர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தலையீடு செய்வதில் நாம் ஆர்வமாக உள்ளோம் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மில்லியன் கணக்கான பொதுமக்களை பாதிக்கக்கூடிய வகையிலான இரசாயன ஆயுதங்களை சிரிய கிளர்ச்சியாளர்கள் கொண்டிருப்பதால் போரை தாமதப்படுத்துமாறு ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.