Sep 01

இந்தியாவில் தொழில் புரட்சி: பொன்.ராதா பெருமிதம்

பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி ஏற்பட பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கையே காரணம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:பொருளாதார வளர்ச்சி உச்சகட்டத்தை எட்டக்கூடிய சூழல்வந்துள்ளது. முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி, மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் 8.2 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதேகாலகட்டத்தில் 5.6 ஆக இருந்தது. கடைசி காலாண்டில் 7.7 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, தற்போது 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மோடி அரசின் மிகப்பெரிய சாதனை. உலகளவில் பொருளாதாரத்தில், மற்ற நாடுகளை விட இந்தியா வளர்ந்து வருவது மகிழ்ச்சி தரும் விஷயம்.

சென்ற ஆண்டு, முதல் காலாண்டில் 3 சதவீதமாக இருந்த விவசாய வளர்ச்சி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 5.3 சதவீதமாக உள்ளது. தொழில் முன்னேற்றம், உற்பத்தி சென்ற ஆண்டு -1.8 சதவீதமாக இருந்த நிலை மாறி 13..5 சதவீதம உயர்ந்துள்ளது.

உலகில் எந்த நாட்டிலும் நடக்காத மிகப்பெரிய தொழில் புரட்சியை இந்த காலண்டில் பெற்றிருக்குமேயானால், அது மோடியின் துணிச்சல் காரணமாக கிடைத்துள்ளது.

தொழில், வணிக வாகனங்கள், அதனுடைய வளர்ச்சி சென்ற முதல் காலாண்டில் -9.5 சதவீதமாக இருந்தது. தற்போது 51.3 சதவீதமாக உள்ளது. இது வரை வந்தது கிடையாது அவ்வளவு பெரிய வளர்ச்சி கிடைத்து. இதற்கு துணிச்சலான தேசபக்தி மிக்க நடவடிக்கையை மோடிஎடுத்துள்ளதால் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.