Sep 01

நோர்வே அரசியல்வாதி மனைவிக்காக செய்த காரியத்தால் சமுகவலைத்தளங்களில் பாராட்டு!

நோர்வே நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி கெடில் சால்விக் ஆல்சன், கடந்த 2013 முதல் நோர்வே நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கின்றார். இவர் நேற்று தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்த இராஜினாமா குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அவா அளித்த பேட்டியில் எனது அமைச்சுப் பதவியில் நான் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக கருதுகின்றேன். மேலும் எனது மனைவி டோன் சால்விக் ஆல்சன் எல்லா வகையிலும் எனக்கு உறதணையாக இருக்கின்றார்.

அவருக்கு நன்றிக் கடன் செலுத்த விரும்புகின்றேன் எனது மனைவிக்கு தற்போது அமெரிக்காவிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்ற வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனவே நான் எனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து விட்டேன் எனக் கூறினார்.

கெடில் தனது மனைவிக்காக தனது பதவியை இராஜினாமா செய்ததை சமுகவலைத்தளங்களில் பலரும் வெகுவாக பராட்டிவருகின்றனர்.