Sep 01

சூறாவளியை தொடர்ந்து வழமைக்கு திரும்பியுள்ள கியுபெக்!

ஒன்ராறியோவின் கிழக்கு பகுதி மற்றும் கியுபெக்கை தாக்கிய கடுமையான சூறாவளியை தொடர்ந்து, அப்பகுதி தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

எனினும், கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்கள் தற்போது சீர் செய்யப்பட்டு வருவதோடு, அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டும் வருகின்றது.

கடந்த புதன்கிழமை ஒன்ராறியோவின் கிழக்கு பகுதி மற்றும் கியுபெக்கை தாக்கிய நுகு-2 எனப்படும் சூறாவளி, சுமார் 179 முதல் 218கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசியுள்ளது.

இதனால், சிமித் வோல்ஸ் ஒன்ராறியோவில் அமைந்துள்ள தானிய களஞ்சியங்கள் இரண்டு சேதமடைந்தன.

அத்தோடு, ஒட்டாவா பார்ஹெவன் பகுதியில் 20,000 இற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இழந்தனர். இதுதவிர மொன்றியல் பகுதியில் 100,000 வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்தனர்.