Sep 01

பிரெக்சிற் உடன்பாட்டிற்கான வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தை!

ஒக்டோபர் மாதத்திற்குள் பிரெக்சிற் உடன்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றிய, பிரித்தானிய பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.


பிரெக்சிற்றின் பின்னர் மிக நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு விவரங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மேற்கோள்காட்டி நேற்று  பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் மைக்கல் பார்னியருடனான பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்த பிரித்தானிய பிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப், ”உடன்பாடொன்றை எட்ட வேண்டும் என்ற ஈடுபாட்டுடன் இருதரப்பும் செயற்பட்டு வருகின்ற நிலையில், பிரஸ்சல்ஸில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில் உடன்பாடு ஏற்படுத்தப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இதேவேளை, பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் எதிர்காலத்தில் உண்மையான முன்னேற்றம் ஏற்படுத்தப்படும்எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து மைக்கல் பார்னியர் கூறுகையில், ”பிரித்தானியாவின் விருப்பப்படி உள்நாட்டு பாதுகாப்பு விடயங்களில் பிரித்தானியாவுடன் இலட்சிய கூட்டணியை உருவாக்க நாம் தயாராக இருக்கின்றோம்எனத் தெரிவித்தார்.