Sep 01

நேபாளத்தின் பிரபல ஆலயம் ஒன்றின் ஓய்வு விடுதியை திறந்து வைத்தார் மோடி


நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு புகழ் பெற்ற பசுபதிநாத் இந்து சிவன் ஆலயமொன்றின், ஓய்வு விடுதியை திறந்துவைத்தார்.

அந்நாட்டு பிரதமர் கட்கா பிரசாத் சர்மா ஓலியுடன் இணைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த விடுதியை பிரதமர் மோடி திறந்துவைத்துள்ளார்.

400 படுக்கை அறைகள், ஓய்வு அறைகள், சமையலறை மற்றும் சாப்பாட்டு அறை, சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோருக்கான ஓய்வு அறைகள் உள்ளடங்களாக, மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள குறித்த விடுதியே நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் இடம்பெற்றுவரும் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதற்காக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.