Sep 01

தேசிய அடையாள அட்டை கட்டணம் அதிகரிப்பு


நாட்டில் பொருட்களின் விலைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணம் இன்று (சனிக்கிழமை) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி 15 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் தங்களின் அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு இன்று முதல் 100 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு 250 ரூபாவும் காணாமல்போன தேசிய அடையாள அட்டைக்கு புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு 500 ரூபாவும் செலுத்த வேண்டுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த கட்டணங்களை கிராம சேவகர் அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்தில் செலுத்தி, கட்டண பற்றுச்சீட்டை  பெற்று அதனை தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தில் இணைத்து அனுப்பிவைக்க வேண்டும் எனவும்  ஆட்பதிவு திணைக்களம்  அறிவித்துள்ளது.

இதேவேளை முத்திரை ஒட்டி அடையாள அட்டை தயாரிக்கும்போது அறவிடப்படும் கட்டணம் இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.