Sep 01

மத்திய மாகாண வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!


மத்திய மாகாணத்தின் அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பினை எதிர்வரும் 4ஆம் திகதி முதல் மேற்கொள்ள உள்ளதாகவும் அச்சங்கம் மேலும்  குறிப்பிட்டுள்ளது.

கண்டி, கலஹா பிரதேச வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியே குறித்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் அச்சங்கம் சுட்டிகாட்டியுள்ளது.

இவ்வாறு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யாவிடின் பாரிய பணிப்புறக்கணிப்பு ஒன்று நிச்சயம் முன்னெடுக்கப்படுமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்ததையடுத்து, வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு மக்கள் சேதம் விளைவித்துமை குறிப்பிடத்தக்கது.