Sep 01

பிள்ளையான் இன்று வருவாரா? நாளை வருவாரா? ஏமாற்றம் தொடர்கிறது!


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் முன்னாள் இரானுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற வருகின்றது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் கைதுசெய்யப்பட்ட இவர்கள் மீதான விசாரணைகள் நீடித்துக்கொண்டே செல்கின்றது. இன்னும் எவ்வளவு காலம் இந்த விசாரணைகள் தொடரப்போகின்றது என்று அவர்களது சட்டத்தரணிகலுக்கே தெரியாது உள்ளதாக கூறப்படுகிறது.

இதே நேரம் இன்று வருவார் நாளை வருவார் இப்போது பிணைகிடைக்கும் அடுத்த தவணையில் பிணைகிடைத்துவிடும் என அவரது கட்சிக்காரர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டே செல்கின்றனர்.

ஆனால் எதுவும் நடந்தபாடில்லை பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குள் கைது செய்யப்பட்டிருக்கும் அவர்களுக்கு பிணை வழங்குவதாக இருந்தால் அதற்கு ஜனாதிபதியின் சிபாரிசு வேண்டும் ஆனால் அது இப்போதைக்கு நடக்கப்போவதில்லை மறு முனையில் இவர்கள் குற்றவாளியாக நிறுபிக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் உண்டா இல்லையா என்பது நிதிமன்ற விசாரணை முடிவுகளிலேயே தெரியவரும் என்ற நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மாகாணசபை தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் இருந்து வரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

இன்று மேல்நீதிமன்ற நீதிபதி விடுமுறை காரணமாகவும் அரச சட்டத்தரணி மற்றும் சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டதுள்ளது.

இதன் போதே வழக்கு விசாரணை செப்டம்பர் 19ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இரானுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசெப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் இந்த படுகொலைச்சம்பவம் நடந்திருந்தது.