Sep 01

குமாரசாமி ஆட்சி நீடிக்கும் : சித்தராமையா ' பல்டி'

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜ.,வினர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். பிரதமர் மோடி கர்நாடக அரசைப் பற்றி கவலைப்படாமல், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கவலைப்பட வேண்டும் என்றார்.

கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்தராமையா, மீண்டும் கர்நாடக முதல்வராவேன். நான் 2வது முறையாக முதல்வராவதை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன என பேசினார். தற்போது முதல்வர் குமாரசாமியின் ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் எனவும், கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை எனவும் சித்தராமையா பேசி உள்ளது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.