Mar 16

கடற் கொள்ளையருடன் சோமாலிய கடற்படை துப்பாக்கிச் சமர்

சோமாலிய கடற்கொள்ளையர்கள் மற்றும் அந்த நாட்டு கடற் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் பரபஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

கடந்த திங்கட்கிழமை எட்டு இலங்கை ஊழியர்களுடன் பயணித்தாக நம்பப்படும் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து கப்பலில் இருந்தவர்களை விடுவிக்க கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியிருந்தனர். 

இந்தநிலையில், குறித்த கப்பலை தாம் சுற்றிவளைத்த போது, இனத்தின் மூத்த குடி ஒருவர் கடத்தல்காரர்களிடம் பேசி சுமூகமான முறையில் கப்பலை விடுவிக்க வாய்ப்பளிக்குமாறு கோரியதாக, சோமாலியாவின் பண்ட்லேன்ட் கடற் பாதுகாப்பு பணிப்பாளர் மொஹமட் ஹசன் குறிப்பிட்டார். 

அத்துடன் அவர்களுடன் இணக்கப்பாடு எட்டாத பட்சத்தில் சண்டையிட்டு கப்பலை மீட்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் கூறியுள்ளன.