Sep 01

வெளிநாடுகளுக்கு சென்று நிதி சேகரிக்க முடிவு கேரள வெள்ள நிவாரண நிதி 1,000 கோடியை தாண்டியது

‘‘கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை 1036 கோடி ரூபாய் நன்கொடையாக வந்துள்ளது’’ என்று பினராய் விஜயன் கூறினார்.

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட ேகரளாவுக்கு தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா உள்பட  பெரும்பாலான மாநிலங்களும், பல்வேறு தனியார் நிறுவனத்தினரும், தொண்டு  அமைப்புகளும் சினிமா கலைஞர்களும் உதவி வருகின்றனர்.

பலர் பணமாகவும், உணவு,  உடை உள்ளிட்ட பொருட்களாகவும் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். ேகரளாவுக்கு  உதவுமாறு கூறி முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதில்  முதல்வர் நிவாரண நிதிக்கான வங்கி எண் உள்பட விவரங்கள்  குறிப்பிடப்பட்டிருந்தன. இதையடுத்து நாடு முழுவதும் இருந்தும்  வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் முதல்வர் நிவாரண நிதி வங்கி கணக்கிற்கு  பணம் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ேகரள முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது: வெள்ளத்தால் உருக்குலைந்த கேரளாவை சீரமைக்க தீவிர நடவடிக்ைககள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை 1036 கோடி வந்துள்ளது.

பணம், காசோலை மற்றும் வங்கி பணபரிமாற்றம் மூலம் 835.86 கோடி கிடைத்துள்ளது. மின்னணு பரிமாற்றம் மூலம் 145.17  கோடியும்  கிடைத்துள்ளது. மேலும் நிதி திரட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை வளைகுடா நாடுகள் உட்பட வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாளிகள் அதிகம் வசிக்கும் ஐக்கிய அரபு நாடுகள், ஓமான், பக்ரைன், சவுதி அரேபியா, கத்தார், குவைத், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், இங்கிலாந்து ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு மலையாளிகளை சந்தித்து அவர்களிடம் இருந்து நிதி உதவி பெறப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

குஷ்பு, சுகாசினி 40 லட்சம் நிதி

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

1980களில் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த நடிகர் நடிகைகள் இணைந்து கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு 40 லட்சம் ரூபாய் வழங்கினர். நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த இந்த அமைப்பை ேசர்ந்த குஷ்பு, சுகாசினி, லிசி ஆகியோர் 40 லட்சம் நிதி வழங்கினர்.