Jun 08

கனேடிய பாதுகாப்பு கொள்கை மறுசீராய்வு வெளியிடப்பட்டது

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்ததும், பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி இருந்ததுமான  கனடாவின் பாதுகாப்பு கொள்கை மறுசீராய்வு ஒட்டாவாவில்  நேற்று ( ஜூன் 7)  வெளியிடப்பட்டது.

இப்பாதுகாப்பு கொள்கை மீளாய்வை கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் அவர்கள் வெளியிட்டார். முக்கிய அம்சங்கள் சில:

·         கனேடிய இராணுவத்தின் தற்போதைய வருடாந்த ஒதுக்கீடான  $18.9  பில்லியன், 2026-27 ஆம் வருடமளவில் மேலும் $32.7 பில்லியன் ஆக அதிகரிக்கப்படல்

·         கனேடிய ஆயுதப் படைகளுக்கு  மேலும் 5,000 பேரை இணைத்துக் கொள்ளல்,

·          இராணுவத்துக்கான புதிய தொழிநுட்ப வசதிகளை ஏற்படுத்தல்,

·         இணைய வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் அதி நவீன யுத்திகளை ஏற்படுத்திக் கொடுத்தல்,

·         2026 ஆம் ஆண்டளவில் கனேடிய ஆயுதப்படைகளில் 25% பெண்களுக்கு இடமளித்தல்