Aug 31

யாழ் வேம்படி பாடசாலைக்கு முன்பாக திடீரென பற்றிய தீயால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர பெண்கள் பாடசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த திடீர் தீ விபத்திற்கு காரணம் இது வரை கண்டறியப்படவில்லை எனினும் வண்டியின் இயந்திரப் பகுதியில் ஏற்பட்ட பெற்றோல் கசிவினாலேயே தீப்பற்றியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த முச்சக்கர வண்டியை பாடசாலைக்கு முன்பாக நிறுத்தி வைத்து விட்டு சாரதி பாடசாலைக்குள் சென்று குறுகிய நேரத்திற்குள் முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்துள்ளதாக சாரதி தெரிவித்துள்ளார். எனினும் தான் தண்ணீர் ஊற்றி அணைப்பதற் முயற்சி செய்தும் வண்டி முற்றாக எரிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறையிட்டதற்கமைய தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.