Aug 31

நான் ரெடி.. நீங்க ரெடியா? தமிழில் பேசி அசத்திய மேற்கு வங்க எம்.பி.!

சமீபத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கின்ற வகையில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற புகழஞ்சலி கூட்டம் நேற்றைய தினம் திமுக சார்பில் சென்னையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகௌடா, காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், திரிணாமூல் காங்கிரஸ் டெரிக் ஓ பிரையன், பாஜக நிதின் கட்கரி உள்ளிட்ட பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன், " கருணாநிதி வலியுறுத்திய கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சி தத்துவத்திற்கு எதிராக ஆட்சி நடத்திக்கொண்டிருந்த பாஜகவை ஆட்சி பொறுப்பிலிருந்து விரைவாக வெளியேற்ற வேண்டும். அதற்காக மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" என தமிழில் பேசினார்.

டெரிக் ஓ பிரையனின் தமிழ் பேச்சுக்கு கூட்ட அரங்கில் அதிகப்படியான கரவொலி எழுந்தது குறிப்பிடத்தக்கது.