Jun 08

சிக்காக்கோ நகரிற்கு மூன்று நாட்கள் வர்த்தகச் சுற்றுலா மேற்கொண்டுள்ள டொரொன்டொ மாநகர பிதா ஜோன் டோரி

கனடாவின் ரொரன்ரோ,அமெரிக்காவின் சிக்காக்கோ ஆகிய இரண்டு நகரங்களுக்கும் இடையேயான வர்த்தக நலன்களை மேம்படுத்தும நோக்கத்துடன் , ரொரன்ரோ மாநகரபிதா ஜோன் டோரி சிக்காகோவிற்கு நகரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், இரண்டு நகரங்களுக்கும் இடையேயான வர்த்தக நலன்களை மேம்படுத்துவது குறித்தும், இரண்டு நகரங்களும் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது   ஆராயப்படும் என்று ஜோன் டோரி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் நிறைவில், சிக்காகோ நகரபிதா  Rahm Emanuel  உடன் இணைந்து சிக்காகோ மிலினியம் பார்க் பகுதியில் உள்ள தொடரூந்துத் தளமொன்று உட்பட ஏனைய முக்கிய இடங்களைக் பார்வையிடுவார்  எனத் தெரிகிறது.

தமது இந்த சிக்காக்கோ பயணத்தின் போது “திறந்த நகரங்களும் – மூடிய எல்லைகளும்: உலகமயமாக்கலின் விளைவுகள்” என்ற தலைப்பிலான பேராளர் கலந்துரையாடல் ஒன்றிலும் ரொரன்ரோ நகரபிதா கலந்துகொள்ளவுள்ளார்.