Aug 31

இறுதி போட்டிக்குள் நுழைந்தது தம்புள்ளை அணி

எஸ்.எல்.சி. ரி-ருவென்ரி தொடரின், 12ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை அணி ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை அணி, இந்த தொடரின் இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு அணியும், தம்;புள்ளை அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய தம்புள்ளை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக இசுரு உதான ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் ஜீவன் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்;து, 141 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அந்த அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக பிரியமல் பெரேரா 46 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அமில அபபோன்சா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இப்போட்டியின் வெற்றிக்கு துணை நின்ற இசுரு உதான தெரிவுசெய்யப்பட்டார்.

கொழும்பு அணி இந்தப் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை ஏற்கனவே தக்கவைத்திருந்தது.

இதனடிப்படையில் குறித்த இரண்டு அணிகளும் எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.