Aug 31

அமெரிக்க கறுப்பின சிறுவன் கொலை, நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

அமெரிக்காவில் கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி 15 வயது எட்வட்ஸ் என்ற சிறுவனே உயிரிழந்தான்.

மேற்குறித்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹிஸ்பேனிக் நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டில் சிறுவர்கள் மது விருந்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்தனர்.

வீடு சுற்றி வளைக்கப்பட்ட விடயம் அறிந்த சிறுவர்களில் சிலர் காரில் தப்பிச் சென்றுள்ளனர். காரை நிறுத்துமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்தும் நிறுத்தாது சென்றதால் ஒலிவர் என்ற பொலிஸ் அதிகாரி காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.

இந்த சம்பவத்திலேயே கறுப்பினச் சிறுவன் உயிரிழந்தான். கடந்த ஆண்டு நடைபெற்ற இச் சம்பவம் அமெரிக்கா முழவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவத்தால் ஒலிவர் என்ற 38 வயதான பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதோடு பணிநீக்கமும் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் அமெரிக்காவில் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு இது ஒரு இனவெறியை ஏற்படுத்தியதாக பலதரப்பினரும் அமெரிக்க பொரிஸாரை விமர்சித்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. ஒரு வருட காலமாக சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று ஒலிவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.