Aug 31

உலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும்!- ட்ரம்பின் புதிய அச்சுறுத்தல்

உலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவை நடத்துகின்ற விதத்தில் உலக வர்த்தக அமைப்பு தோல்வியடையும் பட்சத்தில் தாம் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உலக வர்த்தக அமைப்பினால் அமெரிக்கா நியாயமற்ற விதத்தில் வழிநடத்தப்படுவதாக பாதுகாப்புவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்திவரும் ட்ரம்ப் தெரிவித்தார்.

ட்ரம்பின் இந்த எச்சரிக்கையானது, ஜனாதிபதியின் வர்த்தக கொள்கைகளுக்கும், உலக வர்த்தக அமைப்பின் மேற்பார்வையிலான திறந்த வர்த்தக அமைப்பிற்கும் இடையிலான மோதலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

உலகளாவிய வர்த்தகத்திற்கான விதிகளை ஏற்படுத்துவதற்காகவும், நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கிலும் உலக வர்த்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.