Aug 31

இந்தியாவில் யு ஏஸ் ஸ்மார்ட்போன் ரூ.5,999 விலையில் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் துணை பிரான்டான யு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்டான யு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

யு ஏஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6739 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

யு ஏஸ் ஸ்மார்ட்போன் சார்கோல் கிரே, எலெக்ட்ரிக் புளு மற்றும் ரோஸ் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 2 ஜிபி ரேம் கொண்ட யு ஏஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.5,999 என்றும் 3 ஜிபி ரேம் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் யு ஏஸ் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.