Aug 31

சகல வாகனங்களையும் மின்கலமயமாக்க நடவடிக்கை!

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சகல வாகனங்களையும் மின்கலம் மயமாக்கிவிட வேண்டுமென இந்தியா முடிவு செய்துள்ளது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக முதல் மின்கல வாகனங்களுக்கான வலுவேற்றும் மையத்தை மும்பை – புனே எக்ஸ்பிரஸ் சாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதன்முதலாக மின்கல வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் மையத்தை மஹாராஷ்ரா பவர் நிறுவனம் தொடங்கியுள்ளது. லோனோவாலா பகுதியிலுள்ள ஹோட்டலில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.

2020க்குள் மாநிலம் முழுவதும் சுமார் 500 மையங்களை திறக்கவிருப்பதாகவும் மகாராஷ்ரா மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக மின்கல வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்கலங்கள் கொண்ட கார்கள்,  ஸ்கூட்டர்களின் பயன்பாட்டினை மக்கள் விரைவில் நடைமுறைப்படுத்த உதவ வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மின்கலத்திற்கு வலுவேற்றம் செய்வதற்கான கட்டணத்தை ஒன்லைன் மூலமாகச் செலுத்தி கொள்ளலாம். இதற்காகப் பிரத்தியேக செயலியையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. ‘சார்ஜ் இன்’ செயலி மூலம் அருகிலுள்ள அடுத்த மின் வலுவேற்றல் மையம் பற்றிய தகவல்களையும் எளிதில் பெற முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.