Aug 31

எண்ணெய் குழாய் திட்ட விரிவாக்கம்: ட்ரூடோ அரசாங்கத்திற்கு அனுமதி ரத்து

டிரான்ஸ் மலை எண்ணெய் குழாய் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்திற்கான அனுமதியை, கனேடிய நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

டிரான்ஸ் மலை விரிவாக்க திட்டத்தினால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அரசாங்கம் கருத்திற் கொள்ளவில்லை எனத் தெரிவித்தே நீதிமன்றம் இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து நாட்டின் எரிசக்தி ஒழுங்குறுத்துனர், தேசிய எரிசக்தி சபை ஆகியனவும் கருத்திற் கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவானது கனடாவின் எண்ணெய் உற்பத்தியாளர்களை கடுமையாக பாதித்துள்ளதுடன், கச்சா எண்ணெய் விலை குறைப்பிற்கு எண்ணெய் குழாய் விரிவாக்கத் திட்டம் அவசியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டிரான்ஸ் மலை எண்ணெய் குழாயானது, கனடாவின் அல்பேர்டாவிலிருந்து, பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை கொண்டு செல்வதற்கான ஒரு அமைப்பாகும்.