Aug 31

ஏர் கனடா விமான சேவை செயலிக்குள் அத்து மீறிய ஹக்கர்கள்: 20 ஆயிரம் பேர் பாதிப்பு!

யின் உத்தியோகப்பூர்வ மொபைல் செயலி மீது, ஹக்கர்கள் அத்துமீறியமையால், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22 மற்றும் 24 ஆம் திகதிகளில் செயலி மீது அத்துமீறிய ஊடுருவல் அவதானிக்கப்பட்ட நிலையில், குறித்த ஊடுருவலை தடுப்பதற்கான முயற்சியும் மேற்கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் பின்னர், மீண்டும் அத்துமீறிய ஊடுருவல் மேற்கொள்ளப்படலாம் என எச்சரிக்கை விடுத்த குறித்த நிறுவனம், பயனாளர்களை “தமது செயலிகள் கடவுச் சொற்களை மாற்றுமாறும், அதில் இருந்து முக்கிய தகவல்களான, முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் கடவுசீட்டு இலக்கங்களையும் மாற்றுமாறும்” கேட்டுக்கொண்டுள்ளனர்.