Aug 31

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு

வவுனியா, மடுக்கந்த பகுதியில் குளமொன்றை புனரமைக்கும் பணி நடைபெற்றுகொண்டிருந்தபோது கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


குறித்த குளத்தை புனரமைப்பு செய்துகொண்டிருந்த வேளையில் கைக்குண்டு  ஒன்று அவதானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குளம் புனரமைக்கும் பணிகள்  இடைநிறுத்தபட்டு, இவ்விடயம் தொடர்பாக மடுகந்தை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிபடையினர் கைக்குண்டை மீட்டதுடன், நீதிமன்ற உத்தரவின்பேரில் குண்டு செயலிழக்க செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.