Aug 31

ஆர்.எஸ்.எஸ்., மாநாட்டுக்கு போகாதீங்க: ராகுலுக்கு கார்கே எச்சரிக்கை

ஆர்.எஸ்.எஸ்., மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால், அதை ஏற்க வேண்டாம்' என, காங்., தலைவர் ராகுலுக்கு, அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் மாநாடு, டில்லி விஞ்ஞான் பவனில், அடுத்த மாதம், நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள, காங்., தலைவர், ராகுல், மார்க்சிஸ்ட் பொது செயலாளர், சீதாராம் யச்சூரி உட்பட, அனைத்து கட்சியினருக்கும், அழைப்பு விடுக்க, ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளதாக, ஊடகங்களில், செய்தி வெளியானது. இதையடுத்து, 'ஆர்.எஸ்.எஸ்., மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால், அதை ஏற்க வேண்டாம்' என, ராகுலுக்கு, மல்லிகார்ஜுன் கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, காங்., உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில், மல்லிகார்ஜுன் கார்கே கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., என்பது விஷம். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதன் மூலம், விஷத்தை வலுக்கட்டாயமாக அருந்த வைக்க வேண்டும் என, பொறி வைக்கப்படுகிறது. அதை, ராகுல் அருந்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ்., மாநாட்டில், கலந்து கொள்ள ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும், அவர் கலந்து கொள்ள மட்டார் என, தெரிகிறது.