Aug 31

விடுதியில் வசித்துவந்த பதினெட்டு வயது தமிழ் பெண் எடுத்த விபரீத முடிவு!

வவுனியா குழுமாட்டுச்சந்தி கணேசபுரத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் வசித்து வந்த பெண்ணொருவர் கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதியில் வசித்து வந்த 18 வயதுடைய பெண் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த தற்கொலை பற்றிய மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.