Aug 31

தமிழில் அமிதாப் பச்சனுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா; ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரஜினி!

அமிதாப் பச்சன் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா விரைவில் நடிக்க உள்ளார். 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன். இவருடன் தமிழில் ஒருபடமாவது நடிக்க வேண்டும் என்பது ரஜினிகாந்தின் ஆசை. ஆனால் அவரது விருப்பம் இதுவரை நிறைவேறவில்லை. 

இந்நிலையில் தமிழ் திரைப்படம் ஒன்றில் அமிதாப் பச்சன் அறிமுகமாகிறார். இப்படம் இந்தியிலும் எடுக்கப்படுகிறது. இதில் பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்க உள்ளார். 

இப்படத்திற்கு ‘உயர்ந்த மனிதன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவை நேரில் சந்தித்து, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ’உயர்ந்த மனிதன்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.