Aug 31

தேசியவாதம் என்றால் என்ன?

தேசியவாதம் பற்றிய கருத்தும்ரூபவ் சிந்தனையும்ரூபவ் எண்ணங்களும்குழப்பகரமாக இருப்பதாகக் கூறி அது பற்றி எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்கஇக்கட்டுரை எழுதப்படுகிறது.

அரசு - இனம் - பண்பாடு - தேசியம் - ஜனநாயகம் - மார்க்ஸிஸம் - சோசலிஸம் என்பனஅனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ள வகையில் தேசியவாதம் பற்றியபிரச்சினை குழப்பகரமானதும் சிக்கலானதுமானதுமாக இருக்கின்றது என்பது உண்மை.

அரசு என்ற வகையில் அவை முதலாளித்துவ அல்லது ஜனநாயக அரசுகளாயினும் சரி  சோசலிஸஅல்லது கம்யூனிஸ அரசுகளாயினும் சரி அனைத்தும் இதுவரை உலக வரலாற்றில் தேசியவாதத்திற்கு உட்பட்ட அல்லது கீழ்ப்பட்ட அரசுகளாகவே உள்ளன. இந்தவகையில் ஜனநாயகஅரசுகள்  சோசலிஸ அரசுகள் என்பனவற்றையெல்லாம் தாண்டி அரச அமைப்பில் மிகவும்வலுவான ஆதிக்கம் செலுத்தும் கோட்பாடாகவும்  நடைமுறையாகவும் தேசியவாதம் உள்ளது.

தேசியவாதம் பற்றி பலரும் தத்தம் நோக்கு நிலையில் இருந்து அல்லது தாம்புரிந்துகொண்ட அளவில் இருந்து அதற்கு விளக்கமும்  வியாக்கியானங்களும்கூறுகின்றனர். பலவேளைகளில் தத்தமது சுய ஆதிக்கங்களுக்குப் பொருத்தமாக அதற்கவரைவிலக்கணமும் வியாக்கியானமும் அளிக்கின்றனர். இவற்றை எல்லாம் கடந்துஅறிவுபூர்வமாக வரலாற்று நடைமுறையில் இருந்து மனிதகுல முன்னேற்றத்தின்கோணத்தில் நின்று தேசியவாதம் பற்றிய உண்மையை இக்கட்டுரை தரிசிக்க முனைகிறது.

தேசியவாதமானது மனித குலத்தின் நீண்ட சமூக வரலாற்று வளர்ச்சியின் வெளிப்பாடாய்18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிப்பட்டது. இது 1776ஆம் ஆண்டு நடந்தேறியஅமெரிக்க சுதந்திரப் போர்  1789ஆம் ஆண்டு நடந்தேறிய பிரஞ்சுப்புரட்சிஎன்பனவற்றோடு இணைத்து அடையாங்காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து இன்றுவரை அது ஒருதொடர் வளர்ச்சிப் போக்கை கொண்டதாயும் அமைந்துள்ளது.

தேசியவாதம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தின் குறித்த தனித்துவத்தின் அடிப்படையில் சமூகஒருமைப்பாடு  சம வாய்ப்பு  சம சந்தர்ப்பம்ரூபவ் சம நீதி  பாதுகாப்பு என்பனவற்றைஉறுதிப்படுத்துவதற்கான ஒரு ஜனநாயக அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டுகட்டமைப்பாகும்.

அமெரிக்க விடுதலைப் போர் மற்றும் பிரஞ்சுப் புரட்சிவரை மன்னராதிக்கமும் மற்றும்ஆண்டான் அடிமை முறையுமே அரசியல் சமூக முறைமையாக காணப்பட்டது. அதற்கு எதிராகமக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இத்தேசியவாதம் எழுந்தது. பிரஞ்சுப் புரட்சியின்போது “சுதந்திரம்  சமத்துவம்  சகோதரத்துவம்” என்ற அடிப்படையில் அனைத்துவகைமன்னராதிக்கத்தையும்  ஆண்டான் அடிமை முறைகளையும் எதிர்க்கும் கோட்பாடும்ரூபவ்நடைமுறையுமாக தேசியவாதம் வடிவம் பெற்றது.

பிரஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் வளர்ச்சியின் விளைவாக சுதந்திரம் சமத்துவம்  சகோதரத்துவத்துடன் பண்பாடு என்னும் அம்சமும் தனிவிசேட அழுத்தத்துடன்தேசியவாதத்துடன் சங்கமித்தது. இதனால் குறித்த மக்களின் தனித்துவம் என்பது பிரதேசம் மொழி  பண்பாடு  வாழ்க்கைமுறை என்பனவற்றின் அடிப்படையில் பொருள் விளக்கம்விரிந்தது. இத்தனித்துவம் என்பது தேசியவாதம் என்ற முழுமைக்கான ஏனைய பகுதிகளில் இருந்துபிரிக்கப்பட முடியாது பின்னிப்பிணைந்த நரம்பு நாளங்களாய் உள்ளது.

பிறப்பால் அனைவரும் சமம் என்று கூறும் தேசியவாதமானது பிறப்பின் அடிப்படையில்மன்னன் என்றும் குடியானவன் என்றும் ஆள்வோன் என்றும் ஆளப்படுவோன் என்றும்மற்றும் இன-மத ஆதிக்கம்  சாதி ஆதிக்கம்  அந்நிய ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கம் இராணுவ ஆதிக்கம்  குடும்ப அல்லது வம்ச ஆதிக்கம்  தனிமனித ஆதிக்கம் ஆகிய அனைத்துவகைஆதிக்கங்களுக்கும் எதிரான சமூக ஒருமைப்பாட்டை இது கோரி நிற்கின்றது. இவற்றிற்கானவழிமுறையாக ஜனநாயகம் அமைகிறது. இந்த வகையில் தேசியவாதமானது ஜனநாயக வழிமுறையில்சமூகத்தில் உள்ள அனைவரையும் அரசியல் தீர்மானம் எடுத்தலில் பங்காளியாக்குகிறது.

அதாவது மன்னனின் கையில்ரூபவ் இராணுவ ஆதிக்கத்தின் கையில்  அந்நிய ஆதிக்கத்தின்கையில்  இன ஆதிக்கத்தின் கையில்  சாதி ஆதிக்கத்தின் கையில்  ஆணாதிக்கத்தின் கையில்இருந்து அரசியல் ஆதிக்கத்தை விடுவித்து பரந்துபட்ட மக்களின் கைக்கு அந்த அரசியல்அதிகாரத்தை மாற்றுகிறது.

இது தனிமனித உரிமைரூபவ் கூட்டு உரிமை என்ற இரண்டையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகஇணைக்கும் அதேவேளை அரசியலில் தனிமனித ஆதிக்கத்தில் இருந்து அனைத்துவகை ஆதிக்கங்களையும்நிராகரித்து அனைத்தையும் ஜனநாயகமயப்படுத்துகிறது.மேற்படி குறித்த தனித்துவத்தின் அடிப்படையில் சமூக ஒருமைப்பாடு  சம சந்தர்ப்பம்  சமவாய்ப்பு என்பவற்றுடன் கூடிய வகையில் அந்த மனிதக்கூட்டத்தை சார்ந்திருக்கக்கூடியவளங்களையும்  அவர்களது பண்பாட்டையும்  அவர்களுக்குள் பொதிந்திருக்கும் ஆக்கத்திறன்களையும் வளர்த்து முன்னேறத் தேவையான வகையில் ஒரு பாதுகாப்பு கவசமாகவும் ஜனநாயகத்திற்கான காவு வாகனமாகவும் தேசியவாதம் அமைகிறது.

“அது நீயாக இருக்கிறது” என்ற தத்துவ அடிப்படை இங்கு தேசியவாதத்தை பல்பரிமாணத்தில்புரிந்துகொள்ள அவசியமாகிறது. அதாவது “நீர் நீயாக இருக்கிறது”ரூபவ் “நிலம் நீயாகஇருக்கிறது”  அதாவது “நீ” என்பது வெறுமனே உனது கண்ணோ  காதோ  மூக்கோ  தலையோஅல்லது முழு உடலுமோகூட அல்ல. உனது உடலின் இருப்போடு இணைந்தவாறு இருக்கும் நீரும்நீயாக இருக்கிறது  நிலமும் நீயாக இருக்கிறது  உனது மொழியும் நீயாக இருக்கிறது உனது பண்பாடும் நீயாக இருக்கிறது. நீர் இன்றி நீ இல்லை  நிலம் இன்றியும் நீஇல்லை. உனது மொழி மற்றும் பண்பாடு இன்றியும் நீ இல்லை. இந்த வகையில் ஒரு மனிதனதுவாழ்வோடு பின்னிப்பிணைந்திருக்கும் அவனது சூழல் சார்ந்த அனைத்தையும்  அவனதுஇருப்போடு இணைந்த அனைத்தையும் மனித வாழ்வில் ஒன்றிணைந்த அம்சமாக ஓர் அரசியல் பொருளாதார  பண்பாட்டு உரிமையாக தேசியவாதம் வரையறை செய்கிறது.

தேசியவாதத்தை பிரஞ்சுப் புரட்சி “சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம்” என்றகோட்பாடுகளோடு ஆரம்பித்தது. பின்னாளில் வரலாற்று அனுபவத்தோடு அதுபண்பாட்டையும் ஒரு தலையாய அம்சமாக இணைத்துக் கொண்டது.

இந்த நான்குடனும் கூடவே “ஜீவாதார வாழ்வு” என்பதும் பின்பு இணைக்கப்பட வேண்டியதாயிற்று.

சீன தேசியவாதத்திற்கு தலைமைதாங்கிய டாக்டர். சுன்யாட்சென் எழுதிய Three Principles of the People என்ற நூலில் தேசியம்  ஜனநாயகம்  ஜீவாதார வாழ்வு என்றமூன்றையும் ஒருங்கிணைத்து முன்வைத்தார். சுன்யாட்சென் ஜீவாதார வாழ்வு (Lively Hood)என்ற கோட்பாட்டை மார்க்ஸிய சித்தாத்தத்திலிருந்து பெற்றுக் கொண்டார். அதாவது “உணவு உடை  உறைவிடம்” இந்த மூன்றும் மனிதவாழ்வின் அடிப்படை என்றும் இதனை உறுதிப்படுத்தவேண்டியது மனித நாகரித்தின் கடமையும்  பொறுப்பும் என்று கார்ல் மார்க்ஸ்வற்புறுத்தினார். இதனை அடிப்படையாகக் கொண்டே சுன்யாட்சென் ஜீவாதாரம் என்பதைதேசியவாதத்தின் ஓர் அங்கமாக இணைத்தார்.

மேலும் கார்ல் மார்க்ஸ்க்குப் பின் அவரின் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் தலைவராகஎழுந்த லெனின் சோசலிஸ புரட்சிக் காலத்தில் “நிலம்  சமாதானம்  உணவு” – “Land, Peace and Bread” – என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இதன்படி சமாதானம் என்பதுஅமைதிரூபவ் பாதுகாப்பு என்பவற்றை உள்ளடக்கிய ஒன்றாக அமைந்தது. அதுவும் பின்னாளில்தேசியவாதத்தின் அங்கமானது. மேற்கண்ட இவை அனைத்தின்படி தேசியவாதமானது குறித்த தனித்துவத்தின் அடிப்படையிலான ஜனநாயகம் சுதந்திரம்  சமத்துவம்  சகோதரத்துவம் பண்பாடு – சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை உள்ளடக்கிய சமூகஒருமைப்பாட்டையும் ஆளுமை விருத்தியையும் மற்றும் சமூக பொருளாதார மேன்மையையும் ட்டவல்ல ஒரு வழிமுறையாக வடிவம் பெற்றது.

தேசியவாதம் ஆரம்பத்தில் கருக்கொள்ளும் போது வணிகவாதம் என்கின்ற பொருளாதாரகோட்பாட்டின் கீழ் இறக்குமதிக்கு எதிரான ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையைமுன்வைத்தது. இக்கோட்பாட்டில் ஒரு நிதானமின்மையும்  நடைமுறைக்குப் பொருந்தாத ஒருதலைப்போக்கும் உண்டு. உண்மையில் உள்நாட்டு வளங்களை அந்நிய சக்திகள் சூறையாடவிடாமல்தடுக்கும் அதேவேளை குறித்த மக்கள் கூட்டத்தின் நன்மை கருதி உள்நாட்டு வளங்களுடன் வெளிநாட்டு வளங்களை பொருத்தமான வகையில் இணைத்து முன்னேறுவதற்கான ஒரு பொருளாதாரக்கொள்கையாக தேசியவாதம் அமைய வேண்டியதாயிற்று.

காலனிய ஆதிக்க காலத்தில் பல தேசியத் தலைவர்கள் ஆசியரூபவ் ஆப்பிரிக்க நாடுகளில்எழுந்தனர். சீனாவில் டாக்டர். சுன்யாட்செனும்  இந்தியாவில் மகாத்மா காந்தியும் தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலாவும் முக்கிய உதாரணங்களாக வரலாற்றில்கூறப்படுகின்றனர். டாக்டர் சுன்யாட்செனின் தேசிய முக்கியத்துவத்தை மேற்கண்ட அவரின்நூலின் வாயிலாக ஓரளவு புரிந்து கொள்ளலாம். காந்தியைப் பற்றி உலகின் முக்கிய

இரண்டு தலைவர்களினதும் காலத்தால் அழியாத ஒரு விஞ்ஞானியினதும் கூற்றில் இருந்துபுரிந்து கொள்ளலாம்.

அதாவது 1921ஆம் ஆண்டு லெனினை சந்தித்த எம்.என்.ராய் காந்தியை ஒரு பத்தாம்பசலிஎன்றும் நிலப்பிரபுவத்தின் பிரதிநிதியென்றும் அவருக்கு எதிரான கருத்தை லெனினிடம்தெரிவித்தார். அப்போது காந்தி காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பவர் என்றும்அவருக்குப் பின்னால் கோடிக்கணக்கான மக்கள் நிற்கின்றார்கள் என்றும் எனவே அவருடன்இணைந்து போராடுவதே சரியானது என்றும் வற்புறுத்தினார். அதனைப் புறந்தள்ளியஎம்.என்.ராய் வரலாற்றில் தன்னைத்தானே காணாமல் ஆக்கிக்கொண்டார்.

அதேபோல முதலில் காந்தியை “பிடிச்சிராவி” - Adamant என்றும்  பழைமைபேணியென்!றும் கூறி சினங்கொண்ட ஜவஹர்லால் நேரு பின்னர் “பெண்டூலத்தைபிடித்துவிட்டாற் போல்” கோடானா கோடி மக்கள் காந்தியின் அழைப்பிற்கும்வார்த்தைக்கும் கட்டுப்பட்டு நடப்பதை விபரித்து “காந்திஜி என்றால் என்ன காந்தமா!” என்றுதன் சுயசரிதையில் வியந்து எழுதியுள்ளார். காந்தி பற்றி உலகப் பெரும்விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் கூறுகையில் “காந்தி என்றொரு மனிதன் வாழ்ந்தான் என்றுகூறினால் 21ஆம் நூற்றாண்டு மனிதர்கள் அதனை நம்ப மாட்டார்கள்” என்ற கூற்றும்கவனத்திற்குரியது. துப்பாக்கி படை பட்டாளம் எதுவுமின்றி அவரது வார்த்தைக்குகோடிக்கணக்கான மக்கள் கட்டுண்டு கிடந்தனர் என்பது வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம்ஆகும்.

வெள்ளையின நிறவெறி ஆதிக்கத்திற்கு உட்பட்டு முழு அடிமைகளாகவே நடாத்தப்பட்டநூற்றுக்கணக்கான இனக்குழுக்களாக காணப்பட்ட கறுப்பின மக்களை ஒரு தேசிய குடையின் கீழ்வெள்ளையின ஆதிக்கத்தில் இருந்தும்  காலனிய ஆதிக்கத்தில் இருந்தும் விடுவித்த ஒருமாபெரும் தலைவனாக நெல்சன் மண்டேலா காணப்படுவதுடன் அவர் வெறுமனேதென்னாபிரிக்காவின் தலைவனாக மட்டுமன்றி முழு கறுப்பினத்தின் விடுதலைக்கும் கௌரவத்திற்குமான ஒரு குறியீடாகவும் காணப்படுகிறார்.

வரலாற்றில் தேசியத்தின் பேரால் வெற்றிபெற்ற தேசிய யுகம் கண்ட முக்கியதலைவர்களாக இவர்கள் உள்ளனர். இவர்களின் முக்கியத்துவம் தேசிய யுகத்திற்குரியமுக்கியத்துவம் என்ற வகையில் தேசியவாதத்தின் மேன்மை இங்கு சிறப்படைகிறது.

மேற்படியான இந்த நவீன தேசியவாதம் இன்று புதிய தேசியவாத யுகத்திற்குள்பிரவேசித்திருக்கிறது. இக்கட்டுரை புதிய தேசியவாதத்தைப் பற்றி விபரிக்கப்போவதில்லையாயினும் அதுபற்றிய சில வளர்ச்சிப் போக்கை இங்கு சேர்க்க வேண்டியதுஅவசியம்.

மேற்படி நவீன தேசியவாத அம்சங்களுடன் கூடவே வளர்ச்சி பெற்றிருக்கும் தொழில்நுட்பயுகத்தில் தகவல் தொழில்நுட்பம்  மரபணு தொழில்நுட்பம் என்பவற்றின் வரவோடு இவைதேசிய வளர்ச்சிக்குப் பொருத்தமாக வடிவமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை புதிய தேசியவாதம்வற்புறுத்துகிறது.

பெருவல்லரசுகள் மற்றும் பெருநிறுவனங்கள் என்பன மேற்படி தொழில்நுட்பங்களின்உதவியோடு மனித இனத்திற்கும் பூமிக்கும்  பண்பாடுகளுக்கும்  உயிரினங்களுக்கும் தாவர இனங்களுக்கும்  இயற்கை வளங்களுக்கும் பாதகமாக நடந்து கொள்வதை தடுப்பதற்கான ஏதுவாகபுதிய தேசியவாதம் அமைகிறது. மரபணுவாயிலாக உருவாகும் கலப்பின தாவரங்கள் உயிரினங்கள் என்பன இயற்கையான தாவரங்கள்  உயிரனங்களை காவு கொள்ளாமல் இருக்கக்கூடியவகையில் புதிய தேசியவாதம் இவற்றிற்கான பாதுகாப்பு அரணாக அமைய வேண்டியுள்ளது.

மேலும் இயற்கைரூபவ் சுற்றுச்சூழல்  நீர் வளம் மூலவளங்கள் என்பனவற்றை உரிய வகையில்பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் புதிய தேசியவாதம் கையில் எடுக்கிறது.

மொத்தத்தில் தேசியவாதமும்ரூபவ் புதிய தேசியவாதமும் அனைத்துவகை ஆக்கிரமிப்புக்களுக்கும் ஆதிக்கங்களுக்கும் எதிரானவை. ‘இறைமை’ இறைவனிடமிருந்து மன்னனுக்கு கையளிக்கப்படுவதாகவும் அந்த இறைமையை மன்னன் மக்கள் மீது பிரயோகிப்பதாகவும் கூறப்பட்ட தெய்வீக இறைமைகோட்பாட்டிற்குப் பதிலாக ஜனநாயகத்திற்கு ஏதுவான ‘இறைமை’ மக்களிடமிருந்துபிறக்கின்றது என்ற மக்கள் இறைமை கோட்பாட்டின் அடிப்படையில் தேசியவாதம் அரசியல்பொருளாதார பண்பாட்டு வடிவத்திற்கு உள்ளானது.

இதன்படி மன்னன் ஆதிக்கம் அல்லது பரம்பரை ஆதிக்கம்  இன ஆதிக்கம்  அந்நியஆதிக்கம்  இராணுவ ஆதிக்கம்  சாதிய ஆதிக்கம்  தனிமனித ஆதிக்கம் ஆகிய அனைத்துவகைஆதிக்கங்களையும் எதிர்த்து அரசியலி;ல் மக்களை சம பங்காளிகளாக்குகின்ற சமூகஒருமைப்பாட்டிற்கும்  பாதுகாப்பிற்கும் அனைத்துவகை முன்னேற்றத்திற்குமான ஒருகோட்பாடும் நடைமுறையுமே தேசியவாதமாகும்.