”சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிப்போம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் 60 பொலிஸாருக்கான பயிற்சிப்பட்டறையொன்று தேசியசிறுவர் பாதுகாப்பு  அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர் தொழிலாளர்களை  இல்லாதொழிப்போம் என்ற தொனிப் பொருளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட  அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிப்பட்டறையொன்று இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் டீ.ஆர்.தர்மதாஸ வளவாளராக கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்வில் மாவட்ட உதவிப்பிரதேச செயலர் ரீ. பிருந்தாகரன் தேசியசிறுவர் பாதுகாப்பு  அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தர் செந்தூரன் ஆகியோர் கலந்து கொண்டனர் கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் 60 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.