Aug 30

இந்தோனேசியா ஹோட்டலில் ஜப்பான் வீரர்களின் பரிதாப நிலை!

ஆசிய போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் இந்தோனேஷியாவுக்கு சென்றுள்ளனர். ஜகார்த்தாவிலுள்ள ஹோட்டலில் இக் குழுவினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


குறித்த ஹோட்டலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 4 கூடைப்பந்து வீரர்களும் உல்லாசமாகவிருந்த நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண்டு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதோடு நால்வரும் உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பம் தொடர்பில் விசாரணை நடத்திய ஜப்பான் கூடைப்பந்தாட்ட சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு 4 வீரர்களுக்கும் தலா ஒரு வருட போட்டித்தடை விதித்துள்ளதோடு நான்கு பேரின் 3 மாத சம்பளத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில், ஆசிய போட்டியில் பங்கேற்க இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்த ஜப்பான் கூடைப்பந்தாட்ட வீரர்கள் ஹசி மோட்டா, கெய்டா இமாமுரா, நகாயோஷி, தகுமோ சாட்டோ ஆகிய நான்கு வீரர்களும் ஜகர்த்தாவிலுள்ள விடுதியொன்றுக்குச் சென்று மது அருந்தியதுடன், 4 பெண்களை அழைத்து கொண்டு அங்குள்ள ஹோட்டலில் உல்லாசமாக இருந்தமையும் தெரியவந்தமையால் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்ததோடு நாட்டுக்கும் திருப்பி அனுப்பப்பட்டுளள்மையும் குறிப்பிடத்தக்கது.