Aug 30

நன்கொடை சேகரிப்பு: ஹமில்டன் இசை நிகழ்வில் பாடல் பாடிய இளவரசர் ஹரி!

தொண்டு நிறுவனம் ஒன்றுக்கான நன்கொடை நிதிசேகரிப்பு இசை நிகழ்வில் பிரித்தானிய இளவரசர் ஹரி பாடல் பாடி, பார்வையாளர்களை மகிழ்வித்துள்ளார். இசைக்குழுவான ஹமில்டன் மற்றும் அதன் தற்போதைய செயற்பாட்டாளர்​ லின்-மனுவல் மிரான்டா கலந்து கொண்ட குறித்த நிகழ்வில் இளவரசன் ஹரி, கிங் ஜோர்ஜ் இல்’லின் (King George III) ‘You’ll Be Back என்ற பாடலின் முதல் பகுதியை பாடினார்.

தென்னாபிரிக்காவில் சமூக நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை கருத்தில் கொண்டு செயற்படும் லெசோதோவின் இளவரசர் சீஸ்ஸோவின் எண்ணக்கருவில் உருவான சென்டெபல் தொண்டு நிறுவனத்திற்காக இந்த நிதி சேகரிக்கப்படுகின்றது. சென்டெபல் தொண்டு நிதிக்கான விசேட இசை நிகழ்ச்சியில், இளவரசர் மற்றும் அவரது பாரியார் மேகன் மார்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளின் இறுதியில் பார்​வையாளர்களிடம் பேசிய மிரான்டா, இளவரசர் ஹரியின் மூதாதையரின் நகைச்சுவை வரிகளை கூறி சபையை மகிழ்ச்சிப்படுத்தினார்.

ஹமில்டன் என்பது அமெரிக்கரான அலேக்சாண்டர் ஹமில்டனின் உருவாக்கத்தில் பல இசைக்கலைஞர்களையும், ஹிப்-ஹொப் மற்றும் ரெப், மெல்லிசை தாளம், கதைப்பாடல்கள், அமெரிக்க நாட்டார் பாடல்களை இசைக்கும் கலைஞர்களையும் கொண்ட ஒரு இசைக்குழுவாகும்.

குறித்த இசைக்குழுவினர் அமெரிக்காவில் சிக்காகோ, சென் பிரான்சிஸ்கோ, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயோர்க்கின் ப்ரோட்வே போன்ற நகரங்களில் தமது கலைத்திறமைகளை வெற்றிகரகமாக வௌிப்படுத்தி பிரித்தானியாவுக்கு சென்று விக்டோரியா பெலஸ் திரையரங்கில் நேற்று (புதன்கிழமை) தமது நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தனர்.