Aug 30

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு கனடா ஆர்வம்

நஃப்டா வர்த்தக பேச்சுவார்த்தையினை அமெரிக்காவுடன் மேற்கொள்ள கனடா மிகவும் ஆர்வமாகவுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிரிஷ்டியா ஃபிரீலான்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டீ.சீயில் அந்நாட்டு வர்த்தகப் பிரதிநிதி ரொபர்ட் லைதிசெருடனான கலந்துரையாடலுக்குப் பின்னர், நேற்று (புதன்கிழமை) அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்குறித்த விடயத்தைத் தெரிவித்தார்.

உலக நாடுகளுடன் நல்லுறவை பேணவே கனடா முயற்சிக்கின்றது. நஃப்டா நாடுகளுக்கிடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையினை மேற்கொள்வதற்கு கனடா மிகவும் ஆர்வமாகவுள்ளது என வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். இதற்காக, கனேடிய அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்துள்ளதாகவும் இருதரப்பு பேச்சுவார்த்தை தொடருமென்றும் மேலும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலின் விளைவாக பல விடயங்களை விரைவில் செயற்படுத்திக் கொள்ளப்போவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிரிஷ்டியா ஃபிரீலான்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.