Aug 30

மணமகனின் வயிற்றைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள்; கல்யாணமே நின்றுபோன விநோதம்!!

விநோத காரணம் ஒன்றுக்காக திருமணம் ஒன்று நின்றுபோன சம்பவம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது

இதுகுறித்து தெரியவருவதாவது,


ஊவா மாகாணம் பதுளைப் பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் யுவதி ஒருவருக்கு இத்தாலி மாப்பிள்ளையை வீட்டுக்காரர் மணம்பேசியுள்ளனர்.

புகைப்படம் மற்றும் காணொளி மூலமாகவே இத்தாலி மாப்பிள்ளை பெண் வீட்டிற்கு அடையாளப்படுத்தப்பட்டார்.

மாப்பிள்ளையை புகைப்படம் வாயிலாகப் பார்த்த பெண் உடனடியாக அந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு நாட்கள் நெருங்கியபோது மாப்பிள்ளை உட்பட உறவினர்கள் அனைவரும் நாட்டிற்கு வந்து பதுளையிலுள்ள தனியார் தங்கு விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் (கடந்த வியாழக்கிழமை) மணமகள் வீட்டிற்கு மாப்பிள்ளை உள்ளிட்ட உறவினர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது மணமகனை நேரில் பார்த்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். புகைப்படத்தில் தான் பார்த்த மணமகணுக்கும் நேரில் பார்க்கும் மணமகனுக்கும் சம்மந்தமே இல்லை என்றும் இந்த கல்யாணம் தனக்கு வேண்டாம் என்றும் பெற்றோரிடம் கூறி விடாப்பிடியாக அழுதுள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண்ணை அவரது உறவினர்கள் சமாதானப்படுத்தியபோதும் அது பலனளிக்காத நிலையில் குறித்த திருமணம் நின்றுபோனதாக அவரது உறவினர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த மாப்பிள்ளையின் தொந்தி வயிறும் உடற்பருமனுமே குறித்த கல்யாணம் நின்றுபோனதற்கு காரணம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.