Aug 30

தீவிரமடையும் ரோஹிங்யா விவகாரம் : மியன்மார் அதிபர் ‘பதவி விலக வேண்டும்’

மியன்மாரில் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிகளுக்கு எதிராக கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு ராணுவ வன்கொடுமை தொடர்பாக அந்த நாட்டின் அரச தலைவர் ஆங் சான் சூ கீ பதவி விலக வேண்டும் என்று ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஆணையாளர் செய்ட் ரா’ட் அல் ஹூசென் செய்தியாளர்களின் பேசிய போது, “நோபல் பரிசு பெற்ற ஒரு அரச தலைவரின் முன்னெடுப்புகளுக்கு மன்னிப்பு வழங்குவதென்பது “மிகவும் வருந்தத்தக்கது” என்று குறிப்பிட்டார்.

இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக மியன்மாரின் ராணுவத் தலைமைகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்ட அறிக்கையை தொடர்ந்தே ஆணையாளர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

எனினும், இதனை மறுத்துள்ள மியன்மார் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவித சகிப்புத் தன்மைகளும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இராணுவம் தமது தவறுதலான செயற்பாடுகள் தொடர்பாக முன்னர் தன்னிலை விளக்கத்தை வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையால் வௌியிடப்பட்ட அறிக்கையில், ஜனநாயக சார்பு இயக்கத்தின் நீண்டகால தலைவரான ஆங் சான் சூ கீ, வன்முறைகளை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தது.