Aug 30

கிரீஸ் நாட்டில் 875 சுற்றுலாப் பயணிகள் சென்ற கப்பலில் தீ விபத்து!

கிரீஸ் நாட்டில் அமைந்துள்ள கிரீட் தீவிற்கு சுமார் 875 சுற்றுலா பயணிகளுடனும், 141 தொழிலாளர்களுடனும் பயணித்த கப்பலில் (புதன்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பயணித்துக் கொண்டிருந்த கப்பலின் கீழ் பகுதியிலிருந்து புகை வருவதை அவதானித்த மாலுமி, பயணிகள் அனைவரையும் கப்பலின் மேல் தளத்திற்கு வருமாறு அறிவித்துள்ளார்.

இதன் பின்னர் அருகில் இருக்கும் நிலப்பகுதியை நோக்கி கப்பலை கொண்டுசென்ற மாலுமி, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதன் பின்னர் அதில் பயணித்த சுற்றுல்லா பயணிகள் மற்றும் தொழிலார்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.