Aug 30

பிரித்தானியாவில் 14 வயது மகளுடைய பெற்றோரா நீங்கள்? இதனை அறிவீர்களா?

பிரித்தானியாவில் வாழும் 14 வயதுடைய பெண்பிள்ளைகளில் ஐந்தில் ஒருவர் தம்மைத்தாமே காயப்படுத்துவதாக புதியஆய்வறிக்கை ஒன்று பகிரங்கப்படுத்தியுள்ளது.


சிறார்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிப்பட்ட இந்த விபரங்களின் அடிப்படையில் 14 வயதில்; 22 வீத சிறுமிகளும் 9 வீத சிறுவர்களும் தம்மைத்தாமே காயப்படுத்திக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிழ்சியற்றவாழ்வு மற்றும் அழுத்தங்களால் 14 வயது சிறார்கள் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் சுவர்களில்முட்டிமோதி தம்மைத்தாமே காயப்படுத்துவது, கூரிய பொருட்களால் கீறிக்கொள்வது, தீயில் சுட்டுக்கொள்வது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

விரக்திகொள்வது, கேலிக்கு ஆளாவது, பாடசாலை அழுத்தங்கள், உணர்வுகள் புறக்கணிக்கப்படுவது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் உள்ள புரிந்துணர்வு பிரச்சனைகளால் இந்த நிலைமைக்கு இவர்கள் ஆளாவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.