Aug 30

வன்னியனாக, திருக்குறள் உரையாக இன்னும் பலவாகத் தமிழர்களின் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கின்றன

வன்னியனாக,  திருக்குறள் உரையாக இன்னும் பலவாகத் தமிழர்களின் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கின்றன.

திரைப்படங்கள்  மூலம் சாதி ஒழிப்பு, மூட பக்தி ஒழிப்பு, பெண்களுக்கு சமவுரிமை  என அறிஞர்அண்ணாவைத் தொடர்ந்து  புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியவர்.  கலைஞர் கருணாநிதி கதை, வசனம்எழுதி வெளிவந்த பராசக்தி படம் திரையுலகில் வரலாறு படைத்தது. அவரது தமிழ் கொஞ்சி விளையாடியது.

பகுத்தறிவு பளிச்சிட்டது. பராசக்திக்குப் பின்னரே திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதுபவர்களின் பெயர்திரையில் பெரிய எழுத்தில் காட்டப்பட்டது.

கலைஞர் கருணாநிதி அவர்கள்தான் தமிழ் அறிஞர்களின் கனவுகளில் ஒன்றான தை முதல் நாள் ளே தமிழர்களது

புத்தாண்டின் தொடக்கம், திருவள்ளுவர் பிறந்த நாள்,  திருவள்ளுவர் தொடர் ஆண்டின் தொடக்கம் என 2008 இல்சட்டம் இயற்றியவர்.

கலைஞர் கருணாநிதியின்  இன்னொரு சாதனை அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று  சட்ட சபையில்இயற்றிய சட்டம். இந்த ஆண்டில் அர்ச்சகர் பயிற்சி பெற்று வெளியில் வந்த ஒரு தமிழர்  மதுரைக் கோயில் ஒன்றில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது  எண்ணம், செயல்  எப்போதும் சமூகத்தின் அடித்தட்டில் உள்ளஉழவர்கள், தொழிலாளர்கள், ஏழை பாழைகள் பற்றியே இருந்தன.

போர் காரணமாக  தமிழ்நாட்டில் அரசியல் தஞ்சம் கோரிய  ஒரு இலட்சம் தமிழீழ ஏதிலிகளுக்கு கலைஞர் கருணாநிதிஇருக்கக் குடிசைகள், பிள்ளைகள் பள்ளிக் கூடங்களில் கல்வி கற்க ஏற்பாடு, இலவச அரிசி, சர்க்கரை எனப்  பலவசதிகளைச் செய்து  கொடுத்தார்.  தமிழீழ மக்களின் உரிமைகளுக்கு பல சகாப்தங்களாக ஆதரவு கொடுத்து வந்தவர்.

தமிழக வரலாற்றில் தனக்கென தனியிடம் பிடித்த ஒரு ஒப்பற்ற ஆளுமைமிக்க தலைவரை இழந்து வாடும் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினருக்கும் கழகத் தொண்டர்களுக்கும் கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ் கூறும் நல்லுலகம்  உள்ளவரைகலைஞர்

கருணாநிதியின் புகழ் நீடித்து நிலவும்.