Aug 29

ஞானசார தேரர் குறித்து முக்கிய நீதிமன்ற அறிவிப்பு நாளை


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட கடூழியச்  சிறைத் தண்டனை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு தாக்கல் செய்வதற்கு அனுமதி பெறுவதா இல்லையா என்பது குறித்து நாளை மறுதினம் ஆராயப்படவுள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பிரேம பத்மன் சூரசேன மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோரின் முன்னிலையில் ஞானசார தேரரின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் தமது வாதத்தை முன்வைத்த போதே  இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நீதி மன்றத்தை அவமதித்த குற்றசாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.