Aug 29

இமைக்கா நொடிகள் 'நீயும் நானும்' பாடல்!!

இமைக்கா நொடிகள் படத்தில் இருந்து நீயும் நானும் என்ற பாடல் இன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. 

நடிகர் அதரவா மற்றும் நயன்தாரா நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் தமிழ் படம் இமைக்கா நொடிகள். இந்தப் படத்தில் இடம் பெறும் நீயும் நானும் என்ற பாடல் இன்று வெளியாகி வைராளாகி வருகிறது.

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, நயன்தாரா நடிக்கின்றனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

அதர்வா அக்காவாக நயன்தாரா நடிக்க, நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது 'நீயும் நானும்' பாடல் இன்று வெளியாகியுள்ளது.