Aug 29

காலி முகத்திடலில் பாரவூர்தி தீக்கிரை


கொழும்பு, காலி முகத்திடல் வீதியில் பாரவூர்தியொன்று தீ பிடித்து எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்தின் காரணமாக காலி முகத்திடல் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவித்துள்ள போக்குவரத்து பொலிஸார், பொது மக்களை வேறு மாற்றுப் பாதையை தற்காலிகமாக பாவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.