Aug 29

விரக்தியால் பதவி விலகிய அமைச்சர் குறித்து மக்ரோன் அமைதி!

பிரான்சின் சுற்றாடல் துறை அமைச்சராக இருந்து விரக்தி காரணமாக விலகியுள்ள நிக்கலஸ் ஹூல்லொட்டுடன் அரச அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இதுவரை எந்தவித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் தனது அறிக்கையில், முன்னாள் பசுமை ஆர்வலரின் ஆச்சரியம் மிக்க அறிவிப்பு தொடர்பாக கவனம் செலுத்தி (செவ்வாய்க்கிழமை)  இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

“சிவில் சமூகத்திலிருந்து வருபவர்களுக்கு அமைச்சுப் பதவிகள்  மகிழ்ச்சியாகவும், அதேசமயம் விரக்தியாகவும் இருக்கும்” என்று ஜனாதிபதி ஆலோசகர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“நாம் ஏமாற்றமடைந்தாலும், சோர்வடைந்திருந்தாலும் ஒருபோதும் நிறைவேற்றப்பட வேண்டிய பணியின் தரத்தை குறைத்துவிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டார்

அதேவேளை, பதவி விலகிய சுற்றாடல் துறை அமைச்சரின் வெற்றிடத்திற்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.