Aug 29

ஆரம்பப் போட்டியில் நியு ஸ்டார் வெற்றி

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ இன் ஏற்பாட்டில் மர்ஹும் வித்தியாநிதி டாக்டர் எம்.பீ.பீ.எம்.இஸ்மாயில் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு (26.08.2018) அட்டாளைச்சேனை கோணாவத்தை கடற்கரை திறந்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனைவை.எம்.எம்.ஏ.செயலாளரும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.எல்.கியாஸ்தீன் தலைமையில் நடைபெற்ற இவ்வாரம்ப நிகழ்வில் அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ.பிரதம ஆலோசகரும்,ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளருமான கல்விநாதம் எஸ்.எல்.ஆதம்வாவா மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் உறுப்பினரும் பிரதி அதிபருமான எஸ்.எம்.எம்.ஹனீபா ஆகியோர்களும் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் ஆலோசகரும் நிந்தவூர் தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்தியக்கலாநிதி டாக்டர் கே.எல்.எம்.நக்பர் நட்சத்திர அதிதியாகவும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் அம்பாறை மாவட்டப்பணிப்பாளர் கே.எல்.சுபையிர்,அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ.உபதலைவரும்,ஹைலண்ட் விளையாட்டுக் கழகத்தின் பிரதம போசகரும் சிறாஜ் அன்ட் பிரேதஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளருமான எம்.எச்.எம்.சுபையிர்,சமூகசேவகர் எம்.எல்.கலந்தர் ஆகியோர்களும் கௌரவ அதிதிகளாக இதில் கலந்து கொண்டனர்.

அணிக்கு 11பேர் 8ஓவர் கொண்டதாக மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக்கழகம்,ஆலம்குளம் அல்-அக்சா விளையாட்டுக் கழகம், பிளக் நைட் விளையாட்டுக் கழகம், அல்-நஜா விளையாட்டுக் கழகம் ஆகியன லீக் அடிப்படையில் ஒன்றை ஒன்று மோதவுள்ளனர்.

ஆரம்ப நிகழ்வின் பின் நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினரும், ஆலம்குளம் அல்-அக்சா விளையாட்டுக் கழகத்தினரும் மோதினர்.

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியு ஸ்டார் அணியினர் முதலில் அல்-அக்சா அணியினரை துடுப்பெடுத்தாடும்படி வேண்டியதற்கமைவாக நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.பதிலுக்கு வெற்றி பெறத்துடுப்பெடுத்தாடிய நியு ஸ்டார் அணியினர் 3.5 ஓவர் நிறைவில் 2விக்கட் இழப்பிற்கு 44 ஓட்டங்களைப் பெற்று 8விக்கட்டினால் வெற்றி பெற்றுக் கொண்டனர். அல்-அக்சா அணி சார்பாக ஜெஸ்மீர் 10ஓட்டத்தினைப் பெற்றதுடன் நுஸ்கி 2ஓவர் பந்து வீசி 20 ஓட்டங்களை வழங்கி 1விக்கட்டினை வீழ்த்தினார். நியு ஸ்டார் அணி சார்பாக றிஸ்கான் 2 ஓவர் பந்து வீசி 13 ஓட்டங்களை வழங்கி 3விக்கட்களை கைப்பற்றினார். இவ்வணிசார்பாக அஸ்லம் 27 ஓட்டங்களைப் பெற்று சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ.தலைவர் எம்.ஐ.றியாஸ்,பாலமுனை வை.எம்.எம்.ஏ.தலைவர் ஐ.ஏ.ஸிறாஜ், இலங்கை மின்சார சபையின் உத்தியோகத்தரும் நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் செயலாளருமான ஏ.சீ.அம்சூன், அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ. நிருவாக உறுப்பினர்களான வை.நிதாஸ் எம்.ஏ.எம். அஷ்ரக் உட்பட கழகங்களின் உறுப்பினர்கள் வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

லீக் சுற்றுப்போட்டி முடிவடைந்ததன் பின்னர் இதன் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(02) அட்டாளைச்சேனை ஆலம்குளம் றஹ்மானியா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.