Aug 29

மின்னேரியா சம்பவம் ; பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் கைது

மின்னேரியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 12 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அத்துடன் கைதுசெய்யப்பட்ட இந்த 12 பேரினுள் ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும்  அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.